Friday, February 12, 2010

குங்கும கோலங்கள்

படம்: அண்ணன் ஒரு கோவில்.
இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடகி: வாணிஜெயராமன்


பல்லவி:
குங்கும கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி
கோடி காலங்கள் நான் தேடி நின்றேன்
அவனை அறிவேனடி
குங்கும கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி

பின்னணி இசை2 : 4+4+12+4+4
சரணம்1:
வானில் புகையோடு வருகின்ற தேரில்
ஞான திருச்செல்வன் வரவேண்டும் நேரில்
மானம் மரியாதை அவன் கையில் தாயே
அவனை என் கையில் தரவேண்டும் நீயே
தெய்வீகமன்றோ பெண்ணுக்குத் தாலி
மணவாளன் தானே தாலிக்கு வேலி

குங்கும கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி

பின்னணி இசை3 : 8+8+4

சரணம்2:

மெத்தை விளையாட்டு சுகம் கண்ட பின்னே
தத்தை மொழியோடு தவழ்கின்ற கண்ணே
தந்தை வரும் நாளை எல்லோர்க்கும் கூறு
வந்த பின்னாலே பதினாறு பேறு
தந்தை வரும் நாளை எல்லோர்க்கும் கூறு
வந்த பின்னாலே பதினாறு பேறு
நாளைக்கு கண்ணில் மணவாளன் காட்சி
நம்பிக்கை வானில் தெய்வங்கள் சாட்சி

குங்கும கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13209&st=0#entry155870

No comments:

Post a Comment